டீசல் விலை உயர்வுக்கு நியாயம் கற்பிக்கும் வீரப்பமொய்லி
, ஞாயிறு, 20 ஜனவரி 2013 (09:03 IST)
டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.உலக அளவில் இந்தியாவில் மட்டுமே பெட்ரோல், டீசல் ஆகியவை குறைவான விலையில் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6லிருந்து 9 ஆக அதிகரித்துள்ளோம் என்று வீரப்பமொய்லி கூறியுள்ளார்.டீசலைப் பொறுத்தவரை கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தே விலை அதிகரிக்கப்படாமல் இருந்தது. உலகில் இந்தியாவில் மட்டுமே டீசல் விலை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போதும் உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது என்று வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.