பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை- சல்மான் குர்ஷித்
, வெள்ளி, 18 ஜனவரி 2013 (10:20 IST)
எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நிலவும் பதற்றத்துக்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் கூறியதை இந்தியா நிராகரிப்பதாக வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி, இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் ஊடுருவி பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 இந்திய வீரர்களை கொன்றதுடன் ஒருவருடைய தலையையும் வெட்டி எடுத்து சென்றனர். இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வ்ருகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தொடர்பான எல்லா பிரச்னைகள் குறித்தும் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் , பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி அறிவித்தார்.அவரது கருத்து பதில் கூறியுள்ள வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ‘‘வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான பேச்சு அவசரமாக நடக்க கூடாது. வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுக்கு இப்போது சாத்தியமில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா அவசரப்படவில்லை. நிலைமைகளுக்கு ஏற்ப படிப்படியாக செயல்பட உள்ளோம்’ என்றார்.