கலவரத்தை கட்டுபடுத்த வந்த ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு ஜவான் பலியானார். மேலும் 7 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கலவரம் வெடித்ததையடுத்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். . கலவரப் பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த சனிக்கிழமையும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றும் பார்வையிட்டனர்.
இதையடுத்து இன்று மதியம் ராணுவத்தினர் மீது கலவரகாரர்களால் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது . இதில் ஒரு ஜவான் உயிர் இழந்தார். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இத்தாக்குதல் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ள லட்சக் கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.