நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்த டாக்டர் லட்சுமி செகல் (98), நேற்று கான்பூரில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
டாக்டர் லட்சுமியின் மகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவருமான சுஹாசினி அலி, தனது தாயாரின் கடைசி விருப்பப்படி அவருடைய கண்களையும் உடலையும் மருத்துவ ஆராய்ச்சிப்பணிக்காக தானமாக வழங்கப்படுவதாக அறிவித்தார்.
அதன்படி, கான்பூரில் உள்ள ஜி.எஸ்.வி.எம். மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கேப்டன் லட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
லட்சுமியின் உடல் வைக்கப்பட்டு இருந்த மெக்.ராபர்ட் ஆஸ்பத்திரியில் இருந்து அவருடைய இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
இதில், மத்திய மந்திரி வயலார் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பிருந்தா கரத் உள்பட பல முக்கிய பிரமுகர்கள், திரளான பொது மக்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.