மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார் நேற்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை, அவரது வீ்ட்டில் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியில் 2வது இடம் காலியானது.
இந்த இடம் தனக்கு கிடைக்கும் என்று சரத்பவார் எதிர்பார்த்திருந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ஏ.கே அந்தோணிக்கு அந்த இடம் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்த சரத்பவார், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று அறிவித்தார். இந்நிலையில், சோனியாவை அவரது இல்லத்தில் சரத்பவார் சந்தித்துப் பேசியுள்ளார்.