Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார் பிரதமர் நரசிம்மராவ்!

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார் பிரதமர் நரசிம்மராவ்!
, வியாழன், 5 ஜூலை 2012 (17:31 IST)
FILE
பாபர் மசூதியை கர சேவகர்கள் இடித்த அன்றைய தினத்தில் அதனை கண்டு கொள்ளாமல் பூஜை செய்துகொண்டிருந்தார் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்திப் நய்யார் தனது சுயசரிதை நூஇல் எழுதியது பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

அதாவது நரசிம்மராவ் பாபர் மசூதியை இடிப்பதற்கு மறைமுக ஆதரவு அளித்தார் என்பதே குல்திப் நய்யாரின் குற்றச்சாட்டு.

குல்திப் நய்யார் "பியாண்ட் த லைன்ஸ்" என்ற சுயசரிதை நூலில் இதனை தெரிவித்துள்ளார். இது விரைவில் வெளிவரவுள்ளது.

"நரசிம்மராவ் பாபர் மசூதி இடிப்பில் மறைமுக ஆதரவளராக இருந்தார். இடிப்பின் போடு பூஜையில் உட்கார்ந்த நரசிம்மராவ் பாபர் மசூதியின் கடைசி கல் வீழ்த்து முடிந்தவுடந்தான் பூஜையை முடித்தார்" என்று குல்தீப் நய்யார் அந்த நூலில் எழுதியுள்ளார்.

"மறைந்த சோஷலிசத் தலைவர் மது லிமாயே என்னிடம் இது பற்றி கூறும்போது, நரசிம்மராவிற்கு நெருக்கமான ஒரு நபர் இடிப்பு முடிந்தது என்று அவர் காதுகளில் கிசுகிசுக்க உடனே பூஜையை முடித்தாராம் நரசிம்மராவ்" என்றும் எழுதி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் குல்திப் நய்யார்.

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகன் பி.வி.ரங்காராவ் இதனை கடுமையக மறுத்துள்ளார். இது நம்பமுடியாதது. ஏனெனில் தந்தையார் இதுபோன்று செய்ய வாய்ப்பில்லை ஏனெனில் அவர் தன் வாழ் நாள் முழுதும் முஸ்லிம்களை நேசித்தார். அவர் எங்களிடம் பாபர் மசூதி இடிப்பு ஒருபோதும் நிகழக்கூடாது என்றே தங்களிடம் கூறிவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது எனது தந்தை உயிருடன் இல்லாதபோது அவர் மீது விஷத்தைக் கக்கும் செயலே குல்திப் நய்யாரின் இந்த நூல் என்று அவர் மேலும் சாடினார்.

குல்திப் நய்யார் மேலும் அந்த நூலில் கூறுகையில், இடிப்பு முடிந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் நரசிம்மராவ், இடிப்பைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றி திக்கித் திணறி கூறினார் என்று எழுதியுள்ளார்.

மேலும் உ.பி. முதல்வர் கல்யாண் சிங் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் நரசிம்மராவ் தெரிவித்ததாக குல்திப் நய்யார் எழுதியுள்ளார்.

மேலும் கல்யாண் சிங் அரசை நீக்கம் செய்தபிறகு ஒரே இரவில் சர்ச்சைக்குரிய நிலத்தில் சிறு கோயில் எப்படி உருவானது என்று கேட்டபோது துணை ராணுவப்படையினரை பாபர் மசூதி இடத்திற்கு அனுப்பியதாகவும் மோசமான வானிலை காரணமாக அவர்கள் அந்த இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை என்றும் கூறியதாக குல்திப் நய்யார் எழுதியுள்ளார்.

இடிப்புப் பகுதியில் நின்று கொண்டிருந்த மத்தியப் படைகள் ஏன் எதையும் தடுக்காமல் வாளாயிருந்தனர் என்ற கேள்விக்கும் ராவிடமிருந்து பதில் இல்லை.

"பாபர் மசூதி இடிப்புக்கு ராவ் அரசே முழு பொறுப்பு. அவருக்கு அது நடக்கும் என்று தெரிந்திருந்தபோதும் அவர் அதனை தடுக்க ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை" என்கிறார் குல்திப் நய்யார்.

பாபர் மசூதி இடிப்பு தினம் "பட்டப்பகலில் இந்திய மதச்சார்பின்மை கொலை செய்யப்பட்டது" என்று எழுதுகிறார் குல்திப் நய்யார்.

மேலும் அப்போது காங்கிரஸ் கட்சி இடிப்பு குறித்து கவலைப்படவில்லை மாறாக கட்ஷின் உட்பூசல் குறித்து அதிகம் கவலைப்பட்டது, சோனியா காந்திக்கு நரசிம்மராவை எப்போதும் பிடித்திருக்கவில்லை. அதுவும் குறிப்பாக கட்சிக்கும், அரசுக்கும் அவர் தலைமையேற்றது சோனியாவுக்கு பிடிக்கவில்லை. என்று கூறுகிறார் குல்திப்.

ஆனால் அவர் சோனியாவைப் பற்றி குறிப்பிடுகையில், மதச்சார்பின்மையை ஆதரித்ததாகவும், இந்திய சமூகத்தின் அடிநாதமே பன்மைவாதம் என்று சோனியா தீவிரமாக நம்பியதாகவும் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil