Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழீழம் அமைய இந்தியா உதவ வேண்டும் – நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தல்

தமிழீழம் அமைய இந்தியா உதவ வேண்டும் – நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தல்
, புதன், 25 ஏப்ரல் 2012 (19:10 IST)
தமிழர் பகுதிகளில் சிங்கள ஆதிக்கமுள்ள இலங்கையின் கொடுங்கோல் ஆட்சி தொடர்கின்ற நிலையில், தமிழீழத் தனிநாட்டை உருவாக்குவதற்கு ஐ.நாவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது, இது குறித்த பிரச்சினையை டி.ஆர்.பாலு எழுப்பினார்.

அப்போது, இலங்கையில் தமிழர் வாழ்விடங்களைச் சுற்றி ராணுவத்தினரே உள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வாழ்கின்றனர். கொடுங்கோலாட்சி தான் அங்கு நடக்கிறது. இந்திய- இலங்கை உடன்பாடு மதிக்கப்படவில்லை.

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டபடி, தமிழீழத்தை அமைப்பது குறித்து அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

தமிழர்கள் அங்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்காக இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐ.நாவையும் அனைத்துலக சமூகத்தையும் இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கையில் இருந்து திரும்பியுள்ள போதும், மத்திய அரசிடம் இருந்து எந்த அறிக்கையும் வராதது வருத்தமளிக்கிறது என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.

இதேப்போன்று, தமிழர்களுக்கு புனர்வாழ்வு உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா செயல்முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திமுகவின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தாமரைச்செல்வன் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழர்களுக்கான உதவிகள் அவர்களுக்கே சென்றடைவதற்கும், அது திசை திருப்பி விடப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கும் இந்தப் செயல்முறை அவசியம்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகள் பல சிங்களவர்களால் ஆக்கிரமிக்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. சிங்களவர்கள் அங்கு அத்துமீறிக் குடியேறி வருகின்றனர்.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் இந்த விவகாரங்களை எல்லாம் இந்தியா கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

News Summary:
India should prevail upon the UN for carving out a separate Tamil Eelam from Sinhala-dominated Sri Lanka as the "tyranny" in the Tamil areas was continuing, DMK said in the Lok Sabha

Share this Story:

Follow Webdunia tamil