லோக்பால் மசோதா குறித்த விவாதம் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் உறுதியாக நடக்கும் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.இது குறித்து ராஜ்ய சபாவில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில், இந்த மாதம் 30 ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிவடைகிறது.
தொடரின் முதல் பகுதியில் லோக்பால் மசோதா குறித்த விவாதமும் நடக்கும். மேலும் இந்த பட்ஜெட்கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த மசோதா திருத்தங்கள் குறித்து ஆய்வும் செய்துள்ளோம். இதில் சபை உறுப்பினர்களின் கருத்து கேட்கப்படும், என்று தெரிவித்தார்.
News Summary : Parliamentary Affairs Minister Bansal said that, Lokpal bill debate will be determined in first half session.