கேரளாவின் பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடங்கியது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, உச்சநீதிமன்றம் உயர்மட்டக் குழுவை நியமித்தது.
எம்வி.நாயர் தலைமையில் ஒரு குழுவும், ஓய்வுபெற்ற நீதிபதி எம்என்.கிருஷ்ணன் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் கேரள அரசின் பிரதிநிதிகளும், திருவாங்கூர் மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று காலை கூடி கோயில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவலின்படி இந்த கோயிலின் பொக்கிஷங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது உறுதியானால் உலகிலேயே இதுதான் மிகவும் பணக்காரக் கோயிலாக இருக்கும்.