குஜராத் கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையை மனுதாரருக்கு வழங்க அகமதாபாத் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் குல்பர்க் சொசைட்டி படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கலவரம் தொடர்பாக விசாரித்து அறிக்கையை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்தது. இந்த குழு, கலவரத்தில் முதலமைச்சர் மோடியின் பங்கு குறித்தும் விசாரித்தது.
இந்த நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழுவின் அறிக்கை நகலை மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஜாகியா என்பவர் நீதிமன்றத்தில் கேட்டிருந்தார்.
ஆனால் மனுதாரர் ஜாகியாஜாப்ரிக்கு அறிக்கை நகல் வழங்க உத்தரவிட அகமதாபாத் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
குஜராத் கலவரத்தில் போது கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி எசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா என்பது நினைவில் கொள்ளத்தக்கது.