ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா சுவிஸ் வங்கியில் 200 கோடி ரூபாயை பதுக்கி இருப்பதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது.
மதுகோடா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு விசாரணை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது அமலாக்க துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞ ராஜீவ்குமார், மது கோடா மற்றும் அவரது கூட்டாளிகள் சுவிஸ் வங்கியில் ரூ.200 கோடி அளவுக்கு முதலீடு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அத்துடன் அது தொடர்பான ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.