2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி தான் என தலைமை கணக்கு அதிகாரி வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தனக்கோ, தனது அலுவலகத்திற்கோ எவ்வித நெருக்கடியும் இல்லை என தெரிவித்தார்.
சி.ஏ.ஜி.,யின் மதிப்பீடுகளை தாங்கள் பொதுக்கணக்கு குழுவிற்கோ அல்லது வேறு யாருக்குமோ கொடுக்கவில்லை என்று தெரிவித்த ராய், அதை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் ஏற்கனவே தெரிவித்திருந்ததாக கூறினார்.
பாரம்பரியம்மிக்க சி.ஏ.ஜி., அமைப்பை பலவீனப்படுத்த முயற்சி நடப்பதாகவும், அதற்கு தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் வினோத் ராய் தெரிவித்தார்.