Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்த 6 முதல்வர்கள்!

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்த 6 முதல்வர்கள்!
புதுடெல்லி , சனி, 10 செப்டம்பர் 2011 (16:18 IST)
டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளாமல் தவிர்த்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு அனைத்து மாநில முதலமைச்ச்ர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, குஜராத் முதலமைச்சர் ந்ரேந்திர மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி, கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகிய 6 பேர் கலந்துகொள்ளவில்லை.

இதில் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்திற்கு லோக்ஆயுக்தா நீதிபதியை நியமித்ததில் ஆளுனர் தம்மை கலந்து ஆலோசிக்கவில்லை என்ற கோபத்தில் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருப்பதினாலேயே கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதேப்போன்று இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளையோ அல்லது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையோ மதிக்காமல் தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு வால் பிடித்து செல்வதிலேயே கவனமாக இருக்கும் கோபத்திலேயே ஜெயலலிதாவும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள மதக் கலவர தடுப்பு மசோதா குறித்து விரிவான விவாதம் தேவை என்று வலியுறுத்துவதால் அதன் காரணமாகவே அவர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மாயாவதியை பொறுத்தவரை அவர் எப்போதுமே மத்திய அரசு மீது பாய்ச்சல் காட்டிதான் வருகிறார் என்று காரணங்களை அடுக்குகின்றன டெல்லி வட்டாரங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil