உண்ணாவிரத போராட்டத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணா ஹசாரேம, விரைவில் குணமடைய வேண்டி பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு பூங்கொத்து அனுப்பினார்.
வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, டெல்லி ராம் லீலா மைதானத்தில் 12 நாள் உண்ணாவிரதம் இருந்ததால்,உடல் நலம் பாதிக்கப்பட்ட அண்ணா ஹசாரே தற்போது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் அண்ணா ஹசாரே விரைவில் குணமடையே வேண்டும் என்ற வாழ்த்து அடையுடன், பூங்கொத்து ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு அனுப்பி உள்ளார்.
இதனிடையே ஹசாரேவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.