நில ஊழல் வழக்கு தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இன்று லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
எடியூரப்பா நில ஊழலில் ஈடுபட்டதாக லோக் ஆயுக்தா எடியூரப்பா மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்திருந்த நிலையில், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து எடியூரப்பா, தான் கைதாகாமல் இருக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன் பிணை கோரி மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பாவின் முன் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று மதியம் எடியூரப்பா லோக்ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் இவ்வழக்கில் குற்றம்ச்சாட்டப்பட்ட அவரது மகன் ராகவேந்திராவும் ஆஜாரானார்.