Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2ஜி உரிமத்தை ஏலம் விடுவதில்லை என பிரதமர், சிதம்பரம் முடிவுசெய்தனர்: கனிமொழி வாதம்

2ஜி உரிமத்தை ஏலம் விடுவதில்லை என பிரதமர், சிதம்பரம் முடிவுசெய்தனர்:  கனிமொழி வாதம்
புதுடெல்லி , செவ்வாய், 23 ஆகஸ்ட் 2011 (13:55 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களை ஏலம் விடுவதில்லை என அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவுடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்துதான் முடிவுசெய்தனர் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வாதிட்ட கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களை ஏலம் விடுவதில்லை என்று பிரதமர், நிதி அமைச்சர், தொலைத்தொடர்பு அமைச்சர் ஆகியோர் முடிவெடுத்த கூட்டத்தின் மினிட்புக்கை நான் உங்களுக்கு காட்டுகிறேன் என கனிமொழியின் சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் நீதிபதி ஓ.பி. ஷைனியிடம் தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரமை ஏலம் விடாததன்மூலம் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டதன் அடிப்படையிலேயே, சிபிஐ-யின் வழக்கு உள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சுஷில் குமார் வாதிட்டார்.

அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க பிரதமரும், அப்போதைய நிதி அமைச்சரும், தற்போதைய தொலைத்தொடர்பு அமைச்சரும் போதுமான சாட்சிகள். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படவில்லை என்பதை நாடாளுமன்றத்தில் அவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

இழப்பு என்பதை ஒதுக்கி விட்டால் மோசடி குற்றச்சாட்டும் ஒதுக்கப்பட்டுவிடும்.2010 நவம்பர் 16 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.அந்த அறிக்கையை நாடாளுமன்றம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

2ஜி ஊழலில் பயன் அடைந்ததாக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகியவற்றின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் யூனிநார் ஆகியவற்றுக்கு விற்பனைசெய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.உரிமங்களை அவர்கள் விற்பனை செய்யவில்லை.எனவே அதில் இழப்பு ஏற்படவில்லை என அவர் தமது வாதத்தில் மேலும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil