Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வறுமைக்கோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

Advertiesment
வறுமைக்கோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்
புதுடெல்லி , செவ்வாய், 28 ஜூன் 2011 (19:47 IST)
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பும் நாளை தொடங்குகிறது.

திரிபுரா மாநிலத்தில் நாளை தொடங்கி வைக்கப்படும் இத்திட்டம், சமூக நலத்திட்டங்களுக்கு தகுதியுடைய ஏழைகளை கண்டறிய அரசுக்கு உதவியாக இருக்கும். இதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வாகனம், கான்கிரீட் வீடு, குளிர்சாதனப் பெட்டி, வீட்டுத் தொலைபேசி ஆகியவற்றின் உரிமையாளர்களும், அரசு ஊழியர்கள் மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் மாத வருமானம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்.

ஊரக வளர்ச்சித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டப் பிரிவு, மத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தின் தலைமை பதிவாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளன.

இந்த கணக்கெடுப்பு கணினி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் அதில் உடனடியாக பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil