Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2ஜி ஊழல் விசாரணையில் விஜயமல்லையா, இந்தியா சிமெண்ட்ஸ்

Advertiesment
2ஜி ஊழல் விசாரணையில் விஜயமல்லையா, இந்தியா சிமெண்ட்ஸ்
புதுடெல்லி , வெள்ளி, 24 ஜூன் 2011 (13:26 IST)
2ஜி ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.க்கு பணம் கொடுத்தது ஏன்? என்பது குறித்து பிரபல மதுபான தயாரிப்பு நிறுவன தலைவரான விஜய் மல்லையாவின் யுபி குரூப் நிறுவன தலைவர் விஜய மல்லையா மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பயன்பெற்ற டிபி குரூப் நிறுவனம் அளித்த ரூ.200 கோடிக்கும் அதிகமான பணத்தை முதலீடாகக் கொண்டுதான் கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டது என்று குற்றச்சாட்டு உள்ளது.

இது தொடர்பாக கலைஞர் டி.வி.யின் பங்குதாரர் கனிமொழி, கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது, 2ஜி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து,டிபி குரூப் நிறுவனத்திடம் தான் வாங்கிய 200 கோடி ரூபாய் பணத்தை கலைஞர் டி.வி. அவசரமாக அவசரமாக வட்டியுடன் சேர்த்து 214 கோடி ரூபாயாக திருப்பி செலுத்தியது.

இவ்வாறு கலைஞர் டி.வி. கடனை திருப்பிச் செலுத்துவதற்கான பணத்தை இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் யுபி குரூப் நிறுவனம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் கலைஞர் டி.வி.க்கு கொடுத்து உதவியுள்ளது தெரியவந்தது.

எனவே இது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் யுபி குரூப் நிறுவனம் தவிர்த்த வேறு இரண்டு நிறுவனங்கள் எவை என்பதை தெரிவிக்க சிபிஐ வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

இது குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனிடம் கேட்டபோது,"சிபிஐ எங்களிடம் விளக்கம் கேட்கவுள்ளதா என்பது குறித்து இதுவரை தனக்கு எதுவும் தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.

அதேப்போன்று யுபி குரூப் நிறுவன பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிகையில், விளம்பரம் கொடுத்த வகையில்தான் யுபி குரூப் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கும் பணம் கொடுத்துள்ளது.இதுதவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கும் எங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை. இது தொடர்பாக சிபிஐ எங்களிடம் தொடர்பு கொண்டால், விளக்கம் தருவோம் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil