இந்திய மாலுமிகள் மீட்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சோமாலியா கடற்கொள்ளையர்களால் எகிப்து கப்பல் கடந்த ஆண்டு சிறை பிடிக்கப்பட்டது. இந்த கப்பலில் இருந்த 6 இந்திய மாலுமிகள் உள்பட 22 பேர் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட அவர்கள் பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பிஎன்எஸ் சுல்பிகர் கப்பல் மூலம் நேற்று கராச்சி வந்தடைந்தனர். இந்த நிலையில் 6 இந்திய மாலுமிகள் இன்று காலை டெல்லி வந்தனர்.
அவர்களை வரவேற்ற அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, செய்தியாளர்களிடம் பேசுகையில், சரியான நேரத்தில் பாகிஸ்தான் கடற்படை செய்த உதவி பாராட்டதக்கது என்றார்.