ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று சில்காரி என்ற இடத்தில், கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்த முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் உள்பட 20 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.
இது தொடர்பாக 10 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு கிரிதிக் 1-வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி.மிஸ்ரா, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சத்ரபதி மண்டல், மனோஜ் ராஜ்வார், ஜிதேன் மராண்டி, அனில் ராம் ஆகிய 4 மாவோயிஸ்டுகளுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மற்ற 6 மாவோயிஸ்டுகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்வதாக அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.