டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அடுத்த மாதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் கடன்கள் பெருமளவு உயர்ந்துள்ளதால் இந்த விலை உயர்வை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டீசல் விலையை லிட்டருக்கு 15.44 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 27.47 ரூபாயும் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 381 ரூபாயும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் இதில் பாதி அளவு விலை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.இது தொடர்பாக எரிபொருள் விலைகளை உயர்த்துவது குறித்து முடிவுசெய்யும் அமைச்சர்கள் குழு அடுத்த மாதத் தொடக்கத்தில் கூடி முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.