இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அயலுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இதனையொட்டி இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் இன்று காலை இஸ்லாமாபாத் வந்தார்.
இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் மற்றும் பாகிஸ்தான் அயலுறவுத் துறைச் செயலர் சல்மான் பஷீர் ஆகியோர் இடையே நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில், காஷ்மீர் பிரச்சனை மற்றும் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் இப்பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.