உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான புகாரை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்து வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே புகார் கூறப்பட்டது. ஆனால் இந்த புகாரை அவர் மறுத்தார்.
இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக கே.ஜி.பாலகிருஷ்ணன் சொத்து குவித்து இருப்பதாகவும், அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு மனு அனுப்பப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு புகார் பற்றி விசாரணை நடத்துமாறு, வருவாய்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.