உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இன்று அங்குள்ள குரேஜ் பகுதியை பார்வையிட சென்றார்.
ஹெலிகாப்டர் புறப்பட்ட 20வது நிமிடத்தில் விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.