அமெரிக்காவுக்கான அடுத்த இந்தியத் தூதராக நிருபமா ராவ் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இந்தியாவின் அயலுறவுத் துறைச் செயலராக உள்ள நிருபமா ராவின் பதவிக்காலம் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து தற்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருக்கும் மீரா சங்கருக்கு அடுத்தபடியாக நிருபமா ராவ் அப்பதவியில் நியமிக்கப்படக்கூடும் என்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.