இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கப்போவதாக அறிவித்துள்ள யோகா குரு ராம்தேவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள், இளம்பெண்கள் 11 ஆயிரம் பேருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்போவதாக ராம்தேவ் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
ராம்தேவின் இதுபோன்ற பேச்சுகள் அவரது உள்நோக்கம், உண்மை நிறத்தை வெளிக்காட்டுவதாகவும், அறிவித்தபடி ராம்தேவ் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கும் பட்சத்தில் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று அவர் எச்சரித்துள்ளார்.