உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பாகிஸ்தான் உளவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரித்துவார் மாவட்டம் ரூர்கேவில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் ஏஜண்டாக இருந்து உளவு பார்த்ததாக கூறி புர்கன் என்ற அஜய் என்பவனை சிறப்பு உளவுப்படை காவல்துறையினர் செய்துள்ளளனர்.
மீரட், ரூர்கே ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவ நிலைகள் பற்றி இ-மெயில் மூலம் அஜய் பாகிஸ்தானுக்கு அவ்வப்போது தகவல் அனுப்பி உள்ளதற்கான ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அவனிடம் இருந்து ராணுவ நிலைகளின் வரைபடங்கள், முக்கிய புகைப்படம், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட அஜய்யிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.