நாளை முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.35 காசு உயர்த்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு, 4 மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 15ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோல் விலை நாளை மீண்டும் உயர்த்தப்படுகிறது. இத்தகவலை முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள், விலை உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.