கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
6 கட்டங்களாக நடைபெறும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான 4வது கட்டமாக 63 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் 1.26 கோடி வாக்காளர்கள் வாங்களிக்கின்றனர். 366 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 15,711 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.