ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் நாடு முழுதும் 5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளார்கள்.
நாடு முழுவதும் 16 ஐ.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படிக்க நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அடுத்த கல்வி ஆண்டில் படிப்பதற்கு இன்று நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. 131 நகரங்களில் 1051 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் மே மாதம் 25-ந்தேதி வெளியிடப்படுகிறது.
திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஸ்கேன் செய்து இணையதளம் மூலம் வெளியிட உள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரம் பேர் நுழைவுத்தேர்வு எழுதினார்கள்.