மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) நியமனத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பாக பிரதமர் கூறியதாவது:
பி.ஜே. தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்ததில் தவறு நிகழ்ந்துவிட்டது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இது விடயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வதோடு, அதனை மதிக்கவும் செய்கிறோம்.
புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமிக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் மற்றும் நெறிமுறைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று பிரதமர் மேலும் கூறினார்.