Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 பயங்கரவாதிகள் ஊடுருவல்-மும்பையில் எச்சரிக்கை

4 பயங்கரவாதிகள் ஊடுருவல்-மும்பையில் எச்சரிக்கை
, வெள்ளி, 24 டிசம்பர் 2010 (10:16 IST)
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கரே தாய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் மும்பையில் ஊடுருவியுள்ளதாகவும் அவர்களால் பெரும் ஆபத்து விளையலாம் என்றும் காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

அந்த நால்வரில் ஒருவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை மும்பைவாசிகள் இந்த முகத்தை எங்கு கண்டாலும் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு அறிவிப்பு செய்துள்ளது.

அப்துல் கரீம் மூசா, நூர் அபு இலாஹி, வாலித் ஜின்னா, மஹ்ஃபூஸ் ஆலம் ஆகிய 4 பயங்கரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவியிருப்பதாகவும் இவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு நாசவேலைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை இணை ஆணையர் ஹிமான்சு ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கிறிஸ்த்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இவர்கள் நாசவேலைகளில் ஈடுபடலாம் என்று தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயன்று உளவுத்துறை அகமதாபாதிலும், மும்பையிலும் சில பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் பொதுமக்கள் உடனே காவல்துறையைத் தொடர்புகொள்ள தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil