விவசாயிகளுக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ள நிலையில் ஹைதராபாத்தை நோக்கி அவரது ஆதரவாளர்கள் திரண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் புதிய விடுதி வளாகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே சந்திரபாபு நாயுடுவை சந்தித்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் தேவகவுடாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.