ஊழலையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரிக்க ஷா கமிஷன் அறிக்கை குறித்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன், 'ஷா கமிஷன் அறிக்கை: தொலைந்ததும் மீட்டதும்' என்ற தலைப்பில் புத்தகமாக தொகுத்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டு அத்வானி பேசுகையில், ஊழலையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வெளிப்படுத்த நாடாளுமன்றத்தை பயன்படுத்தினோம் என்றும் மக்கள் விரக்தி அடைந்திருப்பதால் அவை அவசியமாகிறது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், தணிக்கைத்துறை ஒரே பிரச்சனையில் கவனம் செலுத்துவதாகவும், ஒரே விஷயத்துக்கு முக்கியத்துவம் தருவதால் மற்றவை ஒதுக்கப்படுகின்றன என்றும் அத்வானி கூறினார்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு முன்னிலை படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.