வாரணாசி குண்டுவெடிப்பு நிகழ்வில் ஈடுபட்டவர்களை பிடிக்க தேவையான உதவிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதி கூறியுள்ளார்.
வாரணாசியில் சூட்லாகேட் என்ற இடத்தில் மகாகாளிஸ்வரர் கோயில் அருகே கங்கை ஆற்றில் நேற்று மாலை கங்கா ஆர்த்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பால் நிரப்பப்பட்ட கேன் ஒன்று வெடித்து சிதறியதில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்த சரிதா சர்மா என்ற 2வயது சிறுமி உயிரிந்தாள்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி, மும்பை தாக்குதலுக்கு பின்னர் மத்திய அரசு எடுத்த அதே நடவடிக்கையை தற்போதும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தீவிரவாத தாக்குதல்களை சமாளிக்க மத்திய பாதுகாப்பு படையினரிடம் உள்ளதைபோன்ற நவீன கருவிகளை மாநில அரசுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.