பீகார் சட்டப்பேரவை தொகுதிகளில் 200 இடங்களில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னணியில் உள்ள நிலையில், அக்கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது.
பீகார் மாநிலத்தில் 6 கட்டமாக நடைபெற்று முடிந்த 243 தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதுவரை வெளியாகியுள்ள நிலவரப்படி நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்ற்றிபெறும் அளவுக்கு முன்னணியில் உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் தலைமையிலான கூட்டணி 30 இடங்களில் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
243 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 6 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். பெற்றுள்ளனர். சுயேட்சை மற்றும் இதர கட்சி வேட்பாளர்கள் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
ஆட்சியமைக்க 122 இடங்களே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.