2 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று தென் கொரியா செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
"ஜி20'' தலைவர்களின் 5வது மாநாடு, தென் கொரியா தலைநகரான சியோலில் நாளை தொடங்கி 12ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங், கொரியாவுக்கு இன்று செல்கிறார்.
இந்த மாநாட்டில் உலக பொருளாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடுதல், பருவநிலை மாற்றம், வர்த்தகம் பற்றி விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டில் பங்கு பெறும் தலைவர்களை, பிரதமர் மன்மோகன்சிங், தனியாகவும் சந்தித்து பேசுகிறார். இந்த தகவலை இந்திய அயலுறவுத்துறை செயலர் நிரூபமா தெரிவித்தார்.