ஜம்மு காஷ்மீரில் மாதந்தோறும் ஒருமுறை சென்று உண்மை நிலையை கண்டறிய உள்ளதாக நடுநிலையாளர் குழு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது வீட்டில் நடுநிலையாளர் குழுவினர் நேற்று சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடுநிலையாளர் குழு தலைவர் திலீப் பட்கோங்கர், காஷ்மீர் பிரச்சனைக்கு சரியான தீர்வு காண்பதில் பிரதமர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் காஷ்மீருக்கு மாதம் ஒருமுறை சென்று உண்மை நிலையை கண்டறிந்து அவரிடம் தெரிவிக்க போவதாவும் திலீப் பட்கோங்கர்
கூறியுள்ளார்.
பெண்கள், இளைஞர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்கப் போவதாகவும், இதில் ஒவ்வொரு இடத்திலும் மக்களின் கருத்து மாறுபடலாம் என்பதால் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும் என்றும் திலீப் பட்கோங்கர் கூறியுள்ளார்.