அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பஹவத், அதே சமயம் இந்த தீர்ப்பினால் யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை என்று கூறியுள்ளார்.
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் அமைதியை கடைபிடித்து கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த தீர்ப்பினால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு வழி பிறந்துள்ளது.இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றி தோல்வியல்ல.ராமர் கோவிலை கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் உட்பட அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.