Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீர் பிரச்சனை: ‌பிரதம‌ர் தலைமை‌யி‌ல் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

காஷ்மீர் பிரச்சனை: ‌பிரதம‌ர் தலைமை‌யி‌ல் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
புதுடெல்லி , புதன், 15 செப்டம்பர் 2010 (10:04 IST)
காஷ்மீர் பிரச்சனை ‌தொட‌ர்பாக ‌விவா‌தி‌க்க பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்ட‌ம் கூ‌ட்டியு‌ள்ளா‌ர். இ‌தி‌ல் அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ளி‌ன் ஒரு‌மி‌‌த்த கரு‌த்துட‌ன் ‌ஆயுத‌ப்படை சிற‌ப்பு அ‌திகார ச‌ட்ட‌த்தை ‌திரு‌ம்ப பெறுவது உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கிய முடிவுக‌ள் எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நட‌த்த‌ி வரு‌ம் வ‌ன்முறை ‌நிக‌‌ழ்வுக‌ள் கட‌ந்த 3 மாத‌ங்களாக நடைபெ‌ற்று வரு‌கி‌ன்றன. காவ‌ல்துறை‌யின‌ர் நடத்திய துப்பாக்கி சூட்டி‌ல் 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் பலியாகியு‌ள்ளனர். இதற்கிடையே, கடந்த 1990ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் உள்ள இராணுவத்தினருக்கு விசேஷ அதிகாரம் அளிக்கும் சட்டம் அமலில் உள்ளது.

எனவே, போராட்டக்காரர்களை அமைதிபடுத்தும் விதமாக இராணுவத்துக்கு விசேஷ அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்யுமாறு முதலமை‌ச்ச‌ர் உமர் அ‌ப்து‌ல்லா கோரிக்கை விடுத்தார். அதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்ட நிலையில், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எனவே, நேற்று முன்தினம் நீண்ட நேரம் நடந்த பாதுகாப்புக்கான மத்திய அமை‌ச்சரவை கூட்டத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் அறிந்து கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

அந்த கூட்டத்தில், இராணுவத்துக்கு அதிகாரத்தை ரத்து செய்வது, காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்புமாறு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது.

அதே நேரத்தில், இராணுவத்தினருக்கான அதிகாரத்தை ரத்து செய்வதற்கு இராணுவத்தினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விமானப்படை தளபதியும் முப்படை தளபதிகள் கமிட்டியின் தலைவருமான பி.வி.நாயக், "இராணுவ வீரர் ஒருவர், தன்னுடைய கடமையை திறமையாக செய்ய வேண்டுமானால் அவருக்கு தகுந்த சட்டப்பாதுகாப்பு அவசியம்'' என்றார்.

இராணுவத்துக்கு ஆதரவாக இராணுவ அமை‌ச்ச‌ர் ஏ.கே.அந்தோணியும் கருத்து தெரிவித்துள்ளார். எனினும், 'இந்த விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக அரசு அணுகுகிறது. எத்தகைய முடிவை அரசு எடுத்தாலும், அது சரியான ஒன்றாகவே இருக்கும்' என்று அந்தோணி கூறினார்.

இராணுவத்தினருக்கான அதிகாரத்தை ரத்து செய்தால், காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட சட்ட ரீதியான பாதுகாப்பு தேவை என இராணுவத்தினர் கருதுகின்றனர்.

எனவே, அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு இன்று மாலையில் பாதுகாப்புக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் மீண்டும் கூடுகிறது. அப்போது, அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ராணுவத்தினரின் கவலைகள் குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil