மக்களின் மனம் கவர்ந்த உலகத் தலைவர்களில் முதன்மையானவராக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூஸ்வீக் என்ற வார இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூஸ்வீக் என்ற வார இதழ், மக்களின் மனம் கவர்ந்த உலகத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி டாப் டென் தலைவர்களில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முதல் இடம் பிடித்துள்ளார்.
உலகலாவிய பொருளாதார சரிவை ஈடுசெய்து இந்திய பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்தவர் என்று மன்மோகன் சிங்கிற்கு நியூஸ்வீக் புகழாரம் சூட்டியுள்ளது.
உலகத் தலைவர்கள் பலருக்கு முன்மாதியாக விளங்கும் மன்மோகன் சிங், எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் அனைத்து பிரச்சனையையும் திறமையாக எதிர்க்கும் ஆற்றல் பெற்றவர் என்றும் நியூஸ்வீக் பாராட்டு தெரிவித்துள்ளது.
முக்கிய தலைவர்கள் வரிசையில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 2வது இடத்தையும், பிரான்ஸ் அதிபர் சர்கோஸி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். சீன அதிபர் வென்ஜியோபோ 4வது இடத்தில் உள்ளார்.
உலகில் சிறந்த 100 நாடுகள் வரிசையில் இந்தியா 78வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் இந்தியா 55.70 மதிப்பெண் பெற்று இருப்பதாகவும் நியூஸ்வீக் கணித்து உள்ளது.