''மேற்கு வங்க மாநிலத்தில் ஞானேஸ்வரி விரைவு இரயில் கவிழ்ப்புக்கு மாவோயிஸ்டுகளே காரணம்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாற்றியுள்ளார்.
மாவோயிஸ்டுகளால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள சிதம்பரம், தாண்டிவாடா பகுதியை நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதியாக அறிவிக்கும் திட்டமில்லை என்றார்.
ஜார்க்ராம் சதி குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார் என்றும் சி.பி.ஐ விசாரணை தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது என்றும் சிதம்பரம் கூறினார்.
புனே குண்டுவெடிப்புக்கு அப்துல்சமது ஒருவனே காரணம் என்று தெரிவித்துள்ள சிதம்பரம், அனைத்து விமான நிலையங்களின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்றார்.
ஜார்க்கண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்துவது குறித்து ஆளுநர் அறிக்கைக்கு பின் முடிவு என்றும் சிதம்பரம் கூறினார்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக விமானப்படை பயன்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு சிதம்பரம் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.