ஆந்திராவின் 10 மாவட்டங்களைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 நபர் கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டிக்கான 7 அம்ச திட்டத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி தெலுங்கானா கமிட்டி ஆந்திராவின் அனைத்து பிரிவு மக்களிடமும் குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்க வேண்டும், தெலுங்கானா பிரிக்கப்பட்டால் தற்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருப்பது போல் வளர்ச்சி பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், சிறுபான்மையினர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பற்றி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா உருவாக்குவது தொடர்பான தனது அறிக்கையை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிட்டி வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.