Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாஜ் ஹோட்டலை தகர்த்த தீவிரவாதிகள் இந்தியர்கள் - கஸாப்

Advertiesment
தாஜ் ஹோட்டலை தகர்த்த தீவிரவாதிகள் இந்தியர்கள் - கஸாப்
, திங்கள், 18 ஜனவரி 2010 (18:18 IST)
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் போது பிடிபட்ட அஜ்மல் கஸாப், நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக கருத்து தெரிவிப்பது நீடித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தற்போது, மும்பை தாஜ் ஹோட்டலை தகர்த்த தீவிரவாதிகள் அனைவருமே இந்தியர்கள் என்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.

மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தனி நீதிபதி எம்.எல். தகிலியானியின் முன்பு கஸாப்பின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தாஜ் ஹோட்டலின் மீது தாக்குதல் நடத்திய இரு தீவிரவாதிகளில் ஒருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்றும் கஸாப் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

தாஜ் தாக்குதலில் ஈடுபட்ட 3ஆவது தீவிரவாதி மும்பையைச் சேர்ந்த அபு இஸ்மாயில் என்றும், கிர்காம் சவுபட்டியில் அவரை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும், இஸ்மாயிலுடன் சேர்ந்து தாமும் (கஸாப்) தப்பியோட முயன்றபோது தாம் பிடிபட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

தாஜ் தாக்குதலில் ஈடுபட்ட 4ஆவது தீவிரவாதி பற்றி கஸாப் ஏதும் தெரிவிக்கவில்லை.

நீதிமன்றத்தில் கஸாப் முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்களை அளித்து வருகிறார்.

அபு இஸ்மாயிலுடன் சேர்ந்து மும்பை சி.எஸ்.டி ரயில் முனையத்தில் பயணிகளை நோக்கி அத்துமீறி சுட்டதாகவும், கிர்காம் பகுதியில் தாம் வந்தபோது காவல்துறையினரிடம் பிடிபட்டு விட்டதாகவும் தெரிவித்த கஸாப், பின்னர் சிறிது நாட்கள் கழித்து, தமது குற்றத்தை மறுத்து நீதிபதி முன்பு கூறினார்.

கஸாப்புடன் வந்து கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்து ஏதும் சொல்ல விரும்புகிறாயா? என நீதிபதி தகிலியானி கேட்டபோது, அந்த தீவிரவாதிகள் அனைவரும் இந்தியர்கள் என்று கஸாப் கூறியுள்ளார்.

அபு இஸ்மாயில் மும்பையைச் சேர்ந்தவர் என்று எப்படி தெரியும் என நீதிபதி கேட்டதற்கு, அவரது முகத்தை வைத்து தாம் கண்டுபிடித்ததாக கஸாப் பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil