குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை அவரது மாளிகையில் நேற்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.
சுமார் 40 நிமிட நேரம் இந்த சந்திப்பு நீடித்ததாகவும், அண்மையில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து குடியரசுத் தலைவரிடம் பிரதமர் எடுத்துக்கூறியதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்கா சென்றிருந்த போது, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவுடனான இருதரப்பு பேச்சுகள், அதனைத் தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற விவரம் குறித்து மன்மோகன் சிங், குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறியதாகவும் அந்த செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.