Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அக்கறை காட்டுங்கள்: பாக்.கிற்கு பிரதமர் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அக்கறை காட்டுங்கள்: பாக்.கிற்கு பிரதமர் வலியுறுத்தல்
அனந்த்நாக் , புதன், 28 அக்டோபர் 2009 (13:29 IST)
காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் இருந்து குவாசிகண்ட் வரை அமைக்கப்பட்ட ரயில் பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அனந்த்நாக்கில் இருந்து குவாசிகண்ட் பகுதிக்கு இன்று மதியம் சரியாக ஒரு மணிக்கு புறப்பட்ட முதல் பயணிகள் ரயிலை, பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா உட்பட பலர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

முன்னதாக ரயில் பாதை துவக்க விழாவில் பேசிய பிரதமர், “தனது மண்ணில் உருவெடுக்கும் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு ஒடுக்குவதுடன் அந்நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும” என்றார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் எனக் குறிப்பிட்ட பிரதமர், பாகிஸ்தானுடன் அனைத்து பிரச்சனைகளை பேச்சு மூலம் தீர்க்க இந்தியா விரும்புவதாகவும், இந்தியாவின் அமைதி நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பிரிவினைவாத அமைப்பினரிடமும் பேச்சு நடத்த தமது அரசு தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil