பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அந்நாட்டுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்தியர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், “குருத்வாராக்கள் அதிகளவில் உள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதால், அந்நாட்டுக்கு புனிதப் பயணம் செல்வதை இந்தியர்கள் பாதுகாப்பு கருதி தவிர்க்க வேண்டும்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலை மேம்படும் வரை பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்திய மக்களுக்கு அரசு விடுக்கும் வேண்டுகோள்” எனக் கூறப்பட்டுள்ளது.