ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு இந்தியா நிதியுதவி அளிப்பதாக கூறும் பாகிஸ்தானின் குற்றச்சாற்று ஆதாரமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் நடந்த பாதுகாப்புத்துறை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது இதனை தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “பாகிஸ்தானின் குற்றச்சாற்று காரணமற்றது. உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் தாலிபான்களுக்கு இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது” என்றார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில், “பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்த தாலிபான்களுக்கு ஆதரவளிக்கும் அயல்நாட்டு சக்திகளில் இந்தியாவும் ஒன்று” எனக் குற்றம்சாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.