Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக வர்த்தகப் பேச்சு: முட்டுக்கட்டை முறிந்தது – ஆனந்த சர்மா!

Advertiesment
உலக வர்த்தகப் பேச்சு: முட்டுக்கட்டை முறிந்தது – ஆனந்த சர்மா!
, வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (21:24 IST)
ஜெனிவாவில் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த உலக வர்த்தகப் பேச்சுவார்த்தையில் வளரும், வளர்ந்த நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட முட்டுக்கட்டை டெல்லி பேச்சுவார்த்தையில் முறிந்துவிட்டது என்றும், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது என்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

உலக வர்த்தகப் பேச்சுவார்த்தையில் டோஹா மாநாட்டில் தொடங்கிய சந்தை திறப்புத் தொடர்பான சிக்கலைத் தீர்க்க இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில், வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையே மீண்டு்ம் பேச்சுவார்த்தையை தொடர்வது என்று டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

“அடுத்த கட்டமாக வரும் 14ஆம் தேதி ஜெனிவாவில் மீண்டு்ம் சந்திப்பது என்று இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்களுடையை விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கொடுத்துவரும் மானியம் காரணமாக, அப்பொருட்களுடன் வளரும் நாடுகளின் விவசாய உற்பத்திப் பொருட்கள் போட்டியிட முடியாத நிலை உள்ளது. சம்மான வணிக வாய்ப்பை உருவாக்க வேண்டுமெனில் தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு அளித்துவரும் மானியங்களை முன்னேறிய நாடுகள் குறைக்க வேண்டும் என்றும் அதுவரை தங்கள் நாட்டின் சந்தைகளை திறந்துவிடப் போவதில்லை என்றும் இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டிப்பாகக் கூறிவிட்டதால் டோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை நீக்க ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil