ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் உடல் ஹைதராபாத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த மைதானத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் ராஜசேகர ரெட்டியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ பீரங்கி வண்டியில் அவரது உடல் ஏற்றப்பட்டு, உடல் அடக்கம் நடைபெறும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் `அமரர் ஒய்.எஸ்.ஆர்.' என கோஷம் எழுப்பினார்கள்.
இறுதி ஊர்வலத்தில் மாநிலத்தின் இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கே. ரோசையா, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.